ஹரியாலி மட்டன் கிரேவி

Spread the love

தேவையான பொருட்கள் :

1மட்டன்1கிலோ
2வெங்காயம்5
3நெய்5 டேபிள் ஸ்பூன்
4மிளகுதூள்1 டேபிள் ஸ்பூன்
5பச்சைமிளகாய்15 – விழுதாக அரைக்கவும்
6இஞ்சி விழுது1டேபிள் ஸ்பூன்
7பூண்டு விழுது1டேபிள் ஸ்பூன்
8கரம் மசாலா தூள்1டேபிள் ஸ்பூன்
9உப்புதேவையான அளவு
10கொத்தமல்லி2 கட்டு பெரியது
செய்முறை விளக்கம்

1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்

2.  வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்

3. பச்சை மிளக்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்டாக அரைக்க வேண்டும்

4. கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்க வேண்டும்

5. ஒரு  குக்கரில் ஐந்து டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுதூள் சேர்த்து உடனே  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்  பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு விழுதை சேர்த்து  அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை  போகும் வரை நன்றாக வதக்கவும்

Hariyali mutton gravy – samayal samayal

6.  பின்பு மட்டனை சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் கரம் மசாலாவை போட்டு நன்றாக பிரட்டி வதக்கவும்  பிறகு தேவையான அளவு உப்பை போட்டு பொடியாக நறுக்கிய இரண்டு கட்டு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கவும்  பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு ஐந்து விசில் வரும் வரை காத்து இருக்க வேண்டும்

7.  ஐந்து விசில் வந்ததும் கிளறி ஒரு பாத்திரத்தில் பரிமாறவும்

8. வித்தியாசமான முறையில் செய்த ஹரியாலி மட்டன் கிரேவி தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *