Wheat Bonda – கோதுமை போண்டா
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | கோதுமை மாவு | 100கிராம் |
2. | வெங்காயம் | 3 சிறியளவில் |
3. | கரம் மசாலா தூள் | 1ஸ்பூன் |
4. | கடலை எண்ணெய் | தேவையான அளவு |
5. | உப்பு | தேவையான அளவு |
6. | சோடா மாவு | சிறிதளவு |
7. | பச்சை மிளகாய் | 3 |
8. | கருவேப்பிலை,கொத்தமல்லி | சிறிதளவு |
9. | மஞ்சள் தூள் | அரை சிட்டிகை |

செய்முறை விளக்கம்:-
1.வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2. ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணி ஊற்றி உப்பு சோடா மாவு கோதுமை மாவு போட்டு பிசையவும்
3. பிறகு மஞ்சள்தூள் ,வெங்காயம், பச்சைமிளகாய் ,கரம் மசாலா கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து பிசைந்து
4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியவுடன் உருண்டையாக உருட்டி போட்டால் சுவையான கோதுமை போண்டா ரெடி