Vazhakkai Gravy – வாழைக்காய் கறி மசாலா
தேவையான பொருட்கள்:-
1. | வாழைக்காய் | 1 |
2. | வெங்காயம் | 1 பெரியது |
3. | தக்காளி | 2சிறியது |
4. | கறிவேப்பிலை | சிறிதளவு |
5. | புதினா | சிறிதளவு |
6. | கொத்தமல்லி | சிறிதளவு |
7. | இஞ்சி | 1துண்டு(சிறியளவு) |
8. | பூண்டு | 6 பல் |
9. | பட்டை | 2 |
10. | கிராம்பு | 2 |
11. | உப்பு | தேவையான அளவு |
12. | குழம்பு மிளகாய்த்தூள் | தேவையானஅளவு |
13. | மஞ்சள்தூள் | சிறிதளவு |
14. | மிளகு | அரைஸ்பூன் |
15. | எண்ணெய் | தேவையான அளவு |
16. | கடுகு ஊந்து | அரைஸ்பூன் |

அரைக்க தேவையானவை:-
மிக்ஸியில் மிளகு,புதினா, கொத்தமல்லி, பூண்டு இஞ்சி , பாதியளவு வெங்காயம் (சின்னத்துண்டு) ,பட்டை கிராம்பு சிறிதளவு தண்ணிர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
செய்முறை விளக்கம்:-
அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகுஊந்தை போடவும்.
பின்பு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
பொடியாக நறுக்கிய வாழைக்காயை போட்டு வதக்கவும் உடனே மிளகாய்த்தூள். மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும் 3 நிமிடம் கழித்து அரைத்த கறி மசாலாவை ஊற்றி நன்கு கிளறி விடவும் .தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து ஒரு முறை கலக்கிவிடவும்.
பிறகு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து மூடியை எடுத்து நன்றாக கிளறி விடவும் , வாழைக்காய் மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது ஒரு முறை கிளறி விட்டு இறக்கவும் .
சுவையான வாழைக்காய் மசாலா கறி ரெடி!
முக்கிய குறிப்பு –இதன் மணமானது அசல் கோழிகறி ஆட்டுகறி மசாலாவை போன்றே காட்சியும் சுவையுமாய் இருக்கும்.