Vazhakkai Bonda – வாழைக்காய் போண்டா
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | வாழைக்காய் | 1 |
2. | பொட்டுகடலை | 25கிராம் |
3. | கரம் மசாலா | அரை ஸ்பூன் |
4. | உப்பு | தேவையான அளவு |
5. | வெங்காயம் | 1பெரியது |
6. | எண்ணெய் | தேவையான அளவு |
7. | பச்சைமிளகாய் | 3 |
8. | பிரட்தூள் | 1சிறிய கப் |
9. | கசகசா | 1ஸ்பூன் |

செய்முறை விளக்கம்:-
1. முதலில் வாழைக்காயை தோல் உரிக்காமல் அப்படியே குக்கரில் வேக வைக்கவும்.
2. வெந்த வாழைக்காயை தோலை எடுத்து ஒரு பவுலில் போட்டு நன்கு கையால் மசிக்கவும்
3. பொட்டுகடலையை மிக்ஸில் போட்டு பொடிக்கவும்,அதில் ஒரு 3ஸ்பூன் ,பொட்டு கடலை மாவை போடவும்.
4. கரம் மசாலாத்தூள் ,உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் ,கசகசா,பிரட்துர்ளை போட்டு பிசையவும்
5. நன்கு பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்
6. கடாயி;ல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டையை போட்டு பொன்னிறத்தில் வந்தவுடன் எடுத்தால் மொறுமொறுப்பான வாழைக்காய் போண்டா!
முக்கிய குறிப்பு:-
1. வாழைக்காய் உருண்டை தயாரித்து பின்பு பிரட்தூள் சேர்த்து பிரட்டியும் போடலாம்.