Tomatoo Chutney – தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:-
1. | நாட்டு தக்காளி | கால்கிலோ |
2. | குழம்பு மிளகாய் தூள் | 3டீஸ்பூன் |
3. | உப்பு | தேவையான அளவு |
4. | பூண்டு | தட்டியது 1ஸ்பூன் |
5. | கடுகு | 1ஸ்பூன் |
6. | எண்ணெய் | தேவையான அளவு |
7. | கடுகு,வெந்தயம் வறுத்தபொடி | 1ஸ்பூன் |
8. | கருவேப்பிலை | சிறிதளவு |
9. | மஞ்சள்தூள் | அரைஸ்பூன் |
செய்முறை விளக்கம்:-
1.முதலில் நாட்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, சீரகம் (உளுந்து) கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3.அரைத்த தக்காளியை விழுதை ஊற்றி மஞ்சள்தூள் , குழம்பு மிளகாய்த்தூள், தட்டிய பூண்டை போட்டு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி கொதிக்க விடவும்.
4.நன்றாக கிளறி விட்டு கொதித்த பின் எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் வறுத்து பொடி பண்ணிய கடுகு மற்றும் வெந்தயத்தூளை சேர்க்கவும்.
5.ஒரு முறை கிளறி விட்டால் தொக்கு பதம் வரும் நிலையில் இறக்கி விடவும்.
ஏளிமையான சுவையான தக்காளி சட்னி தயார்!
முக்கிய டிப்ஸ்:-
1.நீங்கள் நாட்டுதக்காளியை பயன்படுத்தி சமைத்தால் சமைக்கும் அனைத்து உணவும் சூப்பராக இருக்கும் இந்த தக்காளி சுவை மிகுந்தது.
2. சமையலுக்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.