Susiyam Recipe – சுழியம்
தேவையான பொருட்கள்:-
1. | பச்சை பயிறு | 100கிராம் |
2. | வெல்லம் | 200கிராம் |
3. | மைதா மாவு | 150கிராம் |
4. | தேங்காய் | 50கிராம் |
5. | ஏலக்காய் | 1ஸ்பூன் |
6. | எண்ணெய் | தேவையான அளவு |
செய்முறை விளக்கம் :-
1.முதலில் பச்சைபயிறை கடாயில் போட்டு வறுக்கவும்
2.வறுத்த பச்சைபயிறை தண்ணீர் ஊற்றி 4மணி நேரம் ஊற வைக்கவும்.
3.மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பொடித்த வெல்லம் , தேங்காய் ,ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்..
4.ஒரு கிண்ணத்தில் மைதா மாவை போட்டு தண்ணிர் சேர்த்து (செமி லிக்விட்)மீடியமா கரைத்து கொள்ளவும்.;
5.அரைத்த பச்சை பயிறை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.
6.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சைபயிறு உருண்டையை மைதா மாவில் முழுமையாக தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
7.எளிமையான டேஸ்டான சுய்யம் ரெடி!
முக்கிய டிப்ஸ் :-
1.ஏலக்காயை ஜாரில் போடும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தால் ஏலக்காய் நன்றாக பொடித்து வரும்.
2.இந்த டிஷ் ரொம்ப ஆரோக்கியமானது .அதிக புரதம் உடையது.
முக்கிய குறிப்பு:- நீங்க கடலைபருப்பு, சிறுபருப்பு, காரமணி வைத்து சுய்யம் செய்யலாம் நீங்களும் செய்யுங்க உங்கள் கருத்தை தெரிவியுங்க.