Suraikai Halwa – சுரைக்காய் அல்வா
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | சுரைக்காய் | கால்கிலோ |
2. | முந்தரிபருப்பு | 10கிராம் |
3. | பாதாம்பருப்பு | 10கிராம் |
4. | பசும் பால் | 200மில்லி |
5. | ஏலக்காய் | 5கிராம் |
6. | பசும் நெய் | 100கிராம் |
7. | மஞ்சள் கேசரி பவுடர் | ஒரு சிட்டிகை |

அரைக்க:- முந்தரி,பாதாம்,சிறிது பால்சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவேண்டும்.
செய்முறை விளக்கம்:-
1. முதலில் சுரைக்காயை தோலை சீவிக் கொள்ளவும், பின்பு அதை துருவிக்கொள்ளவும்.
2. ஒரு கடாயில் பசும் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
3. துருவிய சுரைக்காயை போட்டு கிளறி வேக விடவும்.
4. வெந்த சுரைக்காயுடன் அரைத்த முந்தரிபருப்பு,பாதாம்பருப்பு, விழுதை ஊற்றவும்
5. நன்றாக கிளறிவிட்டு ஏலக்காயை ,சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்து கொண்டு தூவி விடவும்
6. பசும்நெய்யை ஊற்றி கிளறி சர்க்கரை போட்டு கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
7. பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் கேசரி பவுடரை போட்டு கிளறிவிட்டால் சுரைக்காய் நன்றாக சுண்டிவருவதை பார்க்கலாம் பிறகு நெய்சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுரைக்காய் அல்வா ரெடி!