Shahi Tukda – சாகி துக்கடா
தேவையான பொருட்கள்:-
1. | சாண்விட்ச் பிரட் | 8 |
2. | பாதாம் பருப்பு | 3 |
3. | முந்தரி பருப்பு | 5 |
4. | பசும் நெய் | தேவையான அளவு |
5. | கேசரி பவுடர் | மஞ்சள் கலர் 1சிட்டிகை |
6. | பால் | 1கப்(200மில்லி) |
7. | சர்க்கரை | 1கப் |
8. | ஏலக்காய் | 5 |
9. | எண்ணெய் | தேவையான அளவு |

செய்முறை விளக்கம்:-
1. பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணவும்,பிறகு உங்களுக்கு பிடித்த மாதிரி ஷேப்பாக வெட்டிக்கொள்ளவும் (ஸ்டார் ஷேப், முக்கோணவடிவம் ,வட்டம் ,சதுரம்).
2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரடை போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
3. பாத்திரத்தில் சர்க்கரை1 கப் ,தண்ணிர் 1அரை கப் சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் பொடியை போடவும் .
4. சர்க்கரை பாகு நிலை வரும் போது பதம் பார்த்து இறக்கிவிடவும்.
5. எண்ணெயில் பொரித்த பி;ரட் துண்டுகளை சர்க்கரை பாகில் போட்டு நன்கு ஊறவிட வேண்டும்.
6. மிக்ஸியில் பாதாம் பருப்பு, முந்தரிபருப்பு, சிறிது பால் சேர்த்து மைபோல் அரைத்துக் கொள்ளவும்.
7. Pan யில் பால் ஊற்றி கொதிக்கவிட்டு ,மஞ்சள் கேசரி பவுடரை 1சிட்டிகை போடவும்.பின்பு அரைத்;த பாதாம் முந்தரி விழுதை சேர்த்து திக்காக வரும் வரை சுண்டகாய்ச்சவும்.
8.தட்டில் சர்க்கரை பாகில் ஊறிய பிரட்துண்டின் மீது காய்ச்சிய பாதாம் முந்தரி விழுது கலவையை மேலே ஊற்றி பரிமாறவும் .
9.yummy &Tasty யான சாஷியி துக்கடா ரெடி!
முக்கிய குறிப்பு:-
1. பிரட்டை நெய்யில் போட்டும் பொரித்ததெடுக்கலாம்.
2. நட்ஸ் வகைகளும் சேர்த்து கொள்ளலாம் (பிஸ்தா, அக்ருட் வேர்கடலை)