Seeralam – சீராளம்
தேவையான பொருட்கள்:-
1. | புழுங்கல் அரிசி | கால்கிலோ |
2. | துவரம் பருப்பு | 100 கிராம் |
3. | காய்ந்த மிளகாய் | 6 |
4. | வெங்காயம் | 2 |
5. | சோம்பு | 1டிஸ்பூன் |
6. | பூண்டு | 10 பல் |
7. | உப்பு | தேவையான அளவு |
8. | கடலைஎண்ணெய் | தேவையான அளவு |
9. | மஞ்சள்பொடி | சிறிதளவு |
10. | கடுகு உளுந்து | 1 ஸ்பூன் |
11. | கறிவேப்பிலை | சிறிதளவு |
செய்முறை விளக்கம்:-
1.புழுங்கல் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்றாக் கழுவி தண்ணிரில் ஒன்றை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
2. நன்றாக ஊறிய அரிசி துவரம்பருப்பை மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு சோம்பு, சிறயதாக வெட்டிய வெங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3.அரைத்த மாவில் மஞ்சள் பொடி சிறிதளவு போட்டு நன்கு கலக்கி விடவும்
4..இட்லி பாத்திரம் எடுத்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி அரைத்த மாவை போட்டு வேக வைக்கவும்.
5.வெந்தவுடன் தட்டில் போட்டு ஆறியதும் கத்தியால் சிறய வில்லைகளாக்கவும் .
6.கடாயில் எண்ணெய் ஊற்றவும் , காய்ந்தவுடன் கடுகு ஊந்து சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், பின்பு வெட்டிய துண்டுகளை போட்டு நன்றாக கிளறி எடுத்தால் அருமையான புதுமையான சுவையான சீராளம் தயார்!
முக்கிய குறிப்பு:-
நான் சமைக்கும் எண்ணெய் கடலைஎண்ணெய் நீங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணெயை உபயோகிக்கலாம். இந்த டிஷ் எனக்கு அம்மா சொல்லி கொடுத்தது. இது பழமையான பாரம்பரையான டிஷ் ஆகும். நீங்களும் சமைத்து ருசித்து மகிழவும்.