Pumpkin Piratal – மஞ்சள் பூசணிக்காய் பிரட்டல்
தேவையான பொருட்கள்:-
1. | மஞ்சள் பூசணிக்காய் | கால்கிலோ |
2. | வெங்காயம் | 1பெரிது |
3. | பூண்டு | 6பல் |
4. | காய்ந்த மிளகாய் | 3 |
5. | கஸ்தூரிமேத்தி | சிறிதளவு |
6. | காய்ந்த மிளகாய்,தனியா வறுத்தபொடி | 1ஸ்பூன் |
7. | கடுகு,வெந்தயம் வறுத்த பொடி | 1ஸ்பூன் |
8. | உப்பு | தேவையானஅளவு |
9. | கருவேப்பிலை ,கொத்தமல்லி | சிறிதளவு |
10. | வெல்லம் | 1ஸ்பூன் |
11. | மஞ்சள்பொடி | அரைஸ்பூன் |
12. | எண்ணெய் | தேவையான அளவு |
13. | கடுகு சீரகம் (ஊந்து) | கால்ஸ்பூன் |

செய்முறை விளக்கம்:-
1. முதலில் குக்கரில் எண்ணெயை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
2. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு ,பூசணிக்காய் ,பூண்டு , மஞ்சள்தூள் ,உப்பு, கருவேப்பிலை ,கொத்தமல்லி ,வறுத்தமிளகாய் தனியாபொடி , போட்டு ஒன்றை தம்பளர் தண்ணிர் சேர்த்து 3விசில் விடவும்.
3. பூசணிக்காயை நன்றாக கிளறியதும் கஸ்தூரி மேத்தி (optional) கடுகு,வெந்தயபொடி, வெல்லம் சேர்த்து பிரட்டினால் பூசணிக்காய் பிரட்டல் தயார். !
முக்கிய டிப்ஸ்:-
1. மஞ்சள் பூசணிக்காயில் நார்ச்சத்துகளும், தாதுசத்துகளும் நிறைய உள்ளன.
2. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பினை முற்றிலும் அகற்றி தெம்பை தருகிறது.
3. உடம்பில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
4. பூசணிக்காயை சாம்பார்,கூட்டு பொரியல் செய்து சாப்பிடலாம் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.நீங்களும் சமைத்து சாப்பிடுங்க .