Mint Chutney – புதினா சட்னி
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | புதினா | 1கப் |
2. | தேங்காய் | 1பத்தை |
3. | வெங்காயம் | பாதி(சின்னது) |
4. | புளி | சிறிதளவு |
5. | பூண்டு | 6பல் |
6. | உப்பு | தேவையான அளவு |
7. | கடலைபருப்பு | 1ஸ்பூன் |
8. | உளுத்தம் பருப்பு | 1ஸ்பூன் |
9. | பச்சைமிளகாய் | 4 |
10. | சர்க்கரை | அரை ஸ்பூன் |
11. | கருவேப்பிலை | சிறிதளவு |
12. | கொத்தமல்லி | சிறிதளவு |
13. | காய்ந்த மிளகாய் | 3 |
14. | தக்காளி | 1சின்னது |
செய்முறை விளக்கம்:-
1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பையும், உளுத்தபருப்பையும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து தனியாக வைக்கவும்.
2.மிக்ஸியில் புதினா, புளி, உப்பு வறுத்த கடலைபருப்பு, உளுத்தபருப்பு, கொத்தமல்லி, சர்க்கரை, தேங்காய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் வெங்காயம், தக்காளி சிறிது தண்ணி சேர்த்து அரைக்கவும்.
3.அரைத்த சட்னியில் தாளித்த கடலைபருப்பு காய்ந்த மிளகாய் ஊந்தபருப்பு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து ஊற்றினால் யம்மியான புதினா சட்னி ரெடி!
முக்கிய குறிப்பு:-
1.கடாயில் எண்ணெய் சேர்த்து ஊந்த பருப்பு புதினா இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், புளி, தேங்காய் உப்பு, போட்டு நன்றாக வதக்கியும் அரைத்து செய்யலாம்.