Milagai Killi Potta Sambar – மிளகாய் கிள்ளி விட்ட சாம்பார்
தேவையான பொருட்கள்:-
1. | துவரம் பருப்பு | 100கிராம் |
2. | நாட்டு தக்காளி | 150கிராம் |
3. | பச்சை மிளகாய் | 2 எண்ணிக்கை |
4. | பூண்டு(தோலுரித்தது) | 8பல் |
5. | பெரிய வெங்காயம் | 100கிராம்(நீளவாக்கில் நறுக்கவும்) |
6. | காய்ந்த மிளகாய் | 6 எண்ணிக்கை |
7. | குழம்பு மிளகாய்த்தூள் | 1டீஸ்பூன் |
8. | உப்பு | தேவையான அளவு |
9. | தனியாத்தூள் | 1டீஸ்பூன் |
10. | மஞ்சள்தூள் | அரை டீஸ்பூன்; |
11. | பெருங்காயத்தூள் | அரை டீஸ்பூன் |
12. | கறிப்பிலை | சிறிதளவு |
13. | கொத்தமல்லி | சிறிதளவு |
14. | தாளிக்க வடகம் | அரை ஸ்பூன்(வடகம் இல்லாதவங்க கடுகு,உளுந்து சேர்க்கவும்) |
15. | தாளிக்க எண்ணெய் | தேவையான அளவு |
16. | சீரகம் | 1டீஸ்பூன் |
17. | புளி | (நெல்லிக்காய்) அளவு |

செய்முறை விளக்கம்;:-
1.முதலில் துவரம் பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவ வேணடும் .
2.குக்கரில் துவரம் பருப்பு, பூண்டு, நாட்டு தக்காளி 100 கிராம் ,பச்சைமிளகாய்-2 மஞ்சள்தூள் சிறிதளவு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
3.வெந்த பருப்பை மத்தினால் நன்றாக கடையவும் (பருப்பு நன்றாக குழைந்திருக்க வேண்டும்)
4.கடாயில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய் ,நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், 50கிராம் பொடியாக நறுக்கிய தக்காளி குழம்பு மிளகாய்த்தூள் ,தனியாத்தூள், பெருங்காயத்தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.கொதித்த கலவையை குக்கரில் கடைந்து வைத்திருக்கும் பருப்பில் ஊற்றி கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்
6. பின்பு புளி கரைத்த நீரை ஊற்றி நன்றாக கிளறி விட்டு கொதிவரும் போது கொத்தமல்லிதழையை சேர்க்கவும்.
7.சாம்பார் தயாரான நிலையில் கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிப்பு வடகம் (கடுகு உளுந்து) கறிப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றவும் .
8.சுவையான மணமான மிளகாய் கிள்ளிவிட்ட சாம்பார் தயார்!
முக்கிய மான குறிப்பு:- நான் கடையில் விற்கும் எந்த விதமான பாக்கெட் பொருட்களையும் உபயோகிக்க வில்லை.