Masala Semiya – மசாலா சேமியா (சேவை)
தேவையான பொருட்கள்:-
1. | வறுத்த சேமியா | 200கிராம் |
2. | வெங்காயம் | பெரியது 2 |
3. | நாட்டுத்தக்காளி | 2 |
4. | இஞ்சி | 1துண்டு(சிறியளவு) |
5. | பூண்டு | 10பல் |
6. | சிவப்பு மிளகாய்த்தூள் | 1டீஸ்பூன் |
7. | மஞ்சள்தூள் | கால் ஸ்பூன் |
8. | உப்பு | தேவையான அளவு |
9. | கொத்தமல்லித்தழை | சிறிதளவு |
10. | புதினா | சிறிதளவு |
11. | பட்டை | 1 |
12. | கிராம்பு | 1 |
13. | கடலை எண்ணெய் தாளிக்க | தேவையான அளவு |
14. | கறிவேப்பிலை | சிறிதளவு |
15. | பச்சை மிளகாய் | 2 |

அரைக்க:- ( இஞ்சி, பூண்டு,பட்டை,கிராம்பு இதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும் )
செய்முறை விளக்கம்:-
1.முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், பிறகு கறிவேப்பிலை போட்டு பொடியாக நறுக்கிய ,பச்சை மிளகாய், வெங்காயம் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
2.பொடியாக நறுக்கிய தக்காளி, (அரைத்த இஞ்சி,பூண்டு பட்டை,கிராம்பு விழுதை போடவும்); .
3.பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4.பின்பு முக்கால் சொம்பு தண்ணீர் ஊற்றி ஒரு தடவை கிளறி விடவும் , நன்கு கொதித்த மசாலா தண்ணியில் சேமியாவை போடவும் .
5.சேமியாவை போட்டவுடன் தட்டு போட்டு மூடி வைக்கவும். ஸ்டவை ஆப் செய்யவும் .
6.பத்து நிமிடம் கழித்து மூடிய தட்டை எடுக்கவும். நன்றாக கிளறி விட்டு இறக்கவும் .
7.சூப்பரான சுவையான மசாலா சேமியா சேவை தயார்!
முக்கிய குறிப்பு:- நீங்கள் விரும்பினால் இதனுடன் காரட், கேப்ஸிகம், பட்டாணி, பீன்ஸ் சேர்க்கலாம்.