how to make vegetables soup – காய்கறி சூப் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
1. | கேரட் | 1 |
2. | நூக்கல் | 1 |
3. | பீன்ஸ் | 50கிராம் |
4. | தக்காளி | 4சிறியது |
5. | வெங்காயம் | 1சிறியது |
6. | பூண்டு | 1முழுசா |
7. | மிளகு,சீரகம் | 1ஸ்பூன் |
8. | மஞ்சள் தூள் | சிறிதளவு |
9. | உப்பு | தேவையான அளவு |
10. | புதினா | சிறிதளவு |
11. | கொத்தமல்லி | சிறிதளவு |
12. | இஞ்சி | 1சின்ன துண்டு |

செய்முறை விளக்கம்:-
1.முதலில் காரட் பீன்ஸ் நூக்கல் பொடியாக நறுக்க வேண்டும்
2.மிக்ஸியில் தக்காளி வெங்காயம் பூண்டு இஞ்சி கொத்தமல்லி புதினா மிளகு சீரகம் ஆகியவற்றை நன்றாக பேஸ்டாக அரைத்து கொள்ள வேண்டும்
3.குக்கரில் இரண்டு சொம்பு தண்ணிர் ஊற்றி காய்கறிகளை போட்டு அரைத்த மசாலா விழுதை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு போட்டு மூன்று விசில் விட்டு வேக விட வேண்டும்
4.பிறகு வெந்த காய்கறி வடிகட்டி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்
5.அரைத்த காய்கறி விழுதை சூப் தண்ணிரில் சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விட வேண்டும்
6.கொதித்த பின் கலக்கி விட்டு இறக்கினால் சுவையான ஆரோக்கிய மான காய்கறி சூப் சுட சுட தயார்!
டிப்ஸ்
1.இந்த சூப்பில் மற்ற காய்கறிகளையும் சேர்க்கலாம் உருளை பட்டாணி ,பாக்ற்காய் முருங்கைகாய் பீட்ருட் காலிபிளவர் மக்காசோளம் அவரைக்காய்
2.இந்த சூப்பில் வெந்த காய்களை விழுதாக அரைத்து சேர்த்தால் காய்களின் சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கும்
3.குழந்தைகளும் அப்படியே குடிப்பார்கள் இந்த சூப் வாரம் இருமுறையாவது நாம் குடித்து வந்தால் ஆரோக்கியமாக வாழமுடியும் நோய் எதிர்ப்பு சக்தியும் நமக்கு கிடைக்கும்.