how to make three dhals adai – முப்பருப்பு அடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:-
1. | புழுங்கல்அரிசி | 1கப் |
2. | கடலைபருப்பு | 1கப் |
3. | பயத்தம் ;பருப்பு | 1கப் |
4. | துவரம் பருப்பு | 1கப் |
5. | பூண்டு | 5பல் |
6. | காய்ந்த மிளகாய் | 10 |
7. | கல் உப்பு | தேவையான அளவு |
8. | வெங்காயம் | 4 |
9. | மஞ்சள் தூள் | சிறிதளவு |
10. | சோம்பு | அரை ஸ்பூன் |
11. | எண்ணெய் | தேவையான அளவு |

செய்முறை விளக்கம்:-
1. அகன்ற பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி கடலை பருப்பு ,துவரம் பருப்பு, சிறுபருப்பு (பயத்தம் பருப்பு) புழுங்கல் அரிசி காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2. அரிசி பருப்பு கலவை 5முறை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
3. வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
4. ஒரு மணி நேரம் கழித்து மிக்ஸியில் காய்ந்த மிளகாய் பூண்டு சோம்பு அரிசி பருப்பு கலவை அரைத்து கொள்ளவும்
5. ரொம்ப நைசா அரைக்காமல் லேச கரகரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
6. பவுலில் அரைத்த மாவை போட்டு மஞ்சள் தூள் உப்பு நறுக்கிய வைத்த வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி விட வேண்டும்
7. அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை சூடாக்கிக்கொள்ளவும்
8. பிறகு கல் காய்ந்ததும் எண்ணெயை ஊற்றி தடவி கரண்டியால் மாவை ஒரு தடவை கலக்கி ஊற்றி கையால் நல்ல அகலமாக தட்ட வேண்டும்,சுற்றி எண்ணெய் ஊற்றி மாவின் நடுவில் நான்கு கரண்டி காம்பால் குழி செய்யவும்
9. அந்த குழியில் நடுவில் எண்ணெய் ஊற்ற வேண்டும் அப்போது தான் பருப்புகள் நன்றாக உட்புறம் வெந்து அடையாக கிடைக்கும்.
10. ஒரு புறம் வெந்தததும் மறுபுறம் திருப்பி போட்டு திரும்ப அடை சுற்றி எண்ணெய் வார்க்கவும்
11. இந்த அடை நல்ல கோல்டன் பிரவுன் கலராக வெந்து வந்தால் எடுக்க வேண்டும் இப்பொழுது முப்பருப்பு அடை தயார்!
முக்கிய குறிப்பு
1. அடை செய்யும் போது எண்ணெய் அதிகமாக தேவைப்படும் இந்த அடை வகைகள் செய்யும் போது காய்ந்த மிளகாயை தண்ணிரில் ஊற வைத்து அரைத்தால் மாவு நல்ல கலராக வரும் மிளகாயும் நன்று எளிதில் மசியும்.
2. இந்த அடை மிகவும் பாரம்பரியான ஹெல்தியான டிஷ் இது செய்வது மிக சுலபமானது. நீங்களும் செய்யுங்க சமையல ஜாம்யுங்க!