how to make mullangi keerai poriyal – முள்ளங்கி கீரை பொரியல்
தேவையான பொருட்கள்:-
1. | இரண்டு முள்ளங்கி (கீரை ) | 1கப் |
2. | பெரிய வெங்காயம் | 1 |
3. | பச்;சை மிளகாய் | 2 |
4. | பூண்டு | 5பல் |
5. | கடுகு, சீரகம் | கால் ஸ்பூன் |
6. | கடலைபருப்பு | அரை ஸ்பூன் |
7. | உளுத்தம் பருப்பு | அரை ஸ்பூன் |
8. | வெள்ளை எள் | 2ஸ்பூன் |
9. | வேர்கடலை | அரை ஸ்பூன் |
10. | காய்ந்த மிளகாய் | 3 |
11. | எண்ணெய் | தேவையான அளவு |

செய்முறை விளக்கம்:-
1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
2. பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்,பூண்டை தோல்உரித்து நீளவாக்கில் கட் பண்ணவும்.
3. முள்ளங்கி கீரையை பொடியாக அறிந்து கொண்டு ,தண்ணிரில் நன்றாக அலசி வைக்கவும்.
4. வெள்ளைஎள் ,வேர்கடலை,காய்ந்த மிளகாய் மூன்றையும் வெறும் கடாயில் போட்டு வறுக்கவும்.பிறகு மிக்ஸயில் போட்டு நன்றாக பொடிப்பண்ணவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் ,கடலைபருப்பு, உளுந்து ,போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
பின்பு வெங்காயம் ,பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் .சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி தட்டு மூடி சிம்மில் வைக்க வேண்டும் .
6.கீரையை வந்த நிலையில் பொடி பண்ண தூளை போட்டு கிளறி விட்டு இறக்கினால்
முள்ளங்கி கீரை பொரியல் தயார்!
முக்கிய குறிப்பு:-ஆரோக்கியம்.
1. முள்ளங்கி கீரை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரையை வெளியேற்ற பயன்படுகிறது.
2. கைவீக்கம் ,கால் வீக்கம் உள்ளவர்கள் கீரை கிடைக்கும் பட்சத்தில் அடிகடி உணவில் சேர்த்து கொள்ளுதல் நன்று.
3. முள்ளங்கி கீரை வைத்து சூப் செய்தும் சாப்பிடலாம்.
4.இந்த கீரையை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கண் பார்;வை கூர்மையாகவும் ; இதயம் நுரையீரல் போன்றவற்றை பாதுகாத்து கொள்ளலாம் .