how to make Kathirikai Rasavangi – கத்திரிக்காய் ரசவாங்கி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
1. | கத்திரிகாய் | 2 |
2. | துவரம் பருப்பு | 50கிராம் |
3. | தனியா | அரை டீஸ்பூன் |
4. | மிளகு | கால் ஸ்பூன் |
5. | சீரகம் | அரை டீஸ்பூன் |
6. | காய்ந்த மிளகாய் | 7 |
7. | கல் உப்பு | தேவையான அளவு |
8. | கடலை பருப்பு | அரை டீஸ்பூன் |
9. | உளுந்த பருப்பு | அரை டீஸ்பூன் |
10. | மஞ்சள் தூள் | கால் ஸ்பூன் |
11. | கருவேப்பிலை | சிறிதளவு |
12. | எண்ணெய் | தேவையான அளவு |
13. | துருவிய தேங்காய் | அரை கப் |
14. | வெல்லம் | சிறிய துண்டு |
15. | புளி | சிறியதளவு |

தாளிக்க தேவையானவை:-
1.கடுகு, சீரகம்- கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய்-1, பெருங்காயத்தூள், சிறிது கருவேப்பிலை.
செய்முறை விளக்கம்:-
1. துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும்.
2. கத்திரிகாயை நீளவாக்கில் நறுக்கி தண்ணிரில் போட்டு வைக்க வேண்டும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு உளுந்து தனியா ,காய்ந்த மிளகாய் ,துருவிய தேங்காய் மிளகு மற்றும் கருவேப்பிலை போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.
4. வதக்கிய மசாலா பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜார்pல் போட்டு விழுதாக அரைக்கவும்
5. கடாயில் எண்ணெய் ஊற்றி கத்திரிகாய் சிறிது உப்பு போட்டு வதக்கவும் . பின்பு மஞ்சள் தூள் தண்ணிர் சேர்த்து மூடி வைக்க வேண்டும்
6. கத்திரிகாய் வெந்தவுடன் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க விட்டு புளிகரைசலை சேர்க்கவும்.
7. பிறகு வெந்த துவரம் பருப்பை சேர்த்து கலக்கி விட்டு சிறிது கல் உப்பு சேர்க்கவும் கொதி வந்தவுடன் வெல்லத்துண்டை போட்டு இறக்கவும்.
8. கடாயில் எண்;ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கருவேப்பிலை பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாவை கிள்ளி போட்டு தாளிக்க வேண்டும் தயாரான நிலையில் உள்ள கத்திரிகாய் ரசவாங்கியில் ஊற்றி பரிமாறவும் .