how to make Kara thavalai vadai – கார வடை(தவலை வடை) செய்வது எப்படி
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | துவரம் பருப்பு | 1கப் |
2. | பச்சரிசி | 1கப் |
3. | காய்ந்த மிளகாய் | 5 |
4. | சோம்பு | கால் ஸ்பூன் |
5. | வெங்காயம் | 1 |
6. | எண்ணெய் | தேவையான அளவு |
7. | பூண்டு | 6பல் |
8. | பட்டை | 1துண்டு |
9. | லவங்கம் | 1 |
10. | மஞ்சள்தூள் | கால் ஸ்பூன் |
கருவேப்பிலை | சிறிது |

செய்முறை விளக்கம்
1. முதலில் துவரம் பருப்பு மற்றும் பச்சரிசி இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
3. மிக்ஸியில் அரிசி பருப்பு காய்ந்த மிளகாய,; பூண்டு, சோம்பு பட்டை லவங்கம் மற்றும் கல் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்
4. பாத்திரத்தில் மாவை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியான நறுக்கிய கருவேப்பிலை மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி விடவும்
5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து ஊற வேண்டும் நன்றாக சிவந்து வரும் போது திருப்பி போட்டு எடுக்க வேண்டும்
6. வடை அகலமாக சிவந்து வரும் சுட சுட பாரம்பரிமான முறையில் செய்த தவலை வடை தயார்! இதற்கு கார வடை என்ற பெயரும் உண்டு.