how to make coconut milk halwa – தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
1. | தேங்காய் | 1 பெரியது |
2. | ஏலக்காய் பொடி | 2ஸ்பூன் |
3. | வெண்ணெய் | 2ஸ்பூன் |
4. | நெய் | 2ஸ்பூன் |
5. | நாட்டு சர்க்கரை | 1கப் |
6. | முந்தரி பருப்பு | 10கிராம் |
7. | பச்சரிசி | 3டேபிள் ஸ்பூன் |

செய்முறை விளக்கம்
1. தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும்.
2. ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்
3. கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறக்க வேண்டும்
4. ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டவுடன் ஊற்ற வேண்டும்
5. சிறிது நேரம் ஊறிய பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
6. தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு உடனே அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும்
7. நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு கிண்ட வேண்டும்
8. அடுப்பை சிம்மில் வைத்தே செய்ய வேண்டும் தொடர்ந்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நல்ல கிளறி விடவும்.
9. கட்டியில்லாமல் விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு நன்று சுருண்டு தேங்காய் பால் அல்வா வந்து விடும்
10. கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரிபருப்பை போட்டு இறக்கி விடவும். அடுப்;பை அனைக்கவும்
11. சுவையான புதுமையான தேங்காய் பால் அல்வா ரெடி!
முக்கிய டிப்ஸ்
1.அடுப்பை சிம்மில் வைத்து செய்தால் அடிபிடிக்காமல் இருக்கும்
2. எந்த அல்வா செய்தாலும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து சமைப்பது நல்லது அல்வா சுவையும் மிகுந்தாக இருக்கும்.
3.நான் வந்து நாட்டு சர்க்கரை சேர்த்தேன் கருப்பெட்டி, அச்சு ;n;வல்லம் சேர்த்தும் பயன் படுத்தலாம்.வெல்லத்தை பயன்படுத்தும் போது வெல்ல கரைலை கொதிக்க விட்டு வடிகட்டி பயன்படுத்தவும் அப்பொழுதுதான் வெல்லத்தில் இருக்கும் தூசி கல் மண் நீக்க முடியும்.