how to make chinese masala noodles – சைனீஸ் நூடுல்ஸ் (சில்லி கார்லிக் நூடுல்ஸ்) செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:-
1. | நூடுல்ஸ் வெஜ் | 200கிராம் |
2. | கேரட் | 1 |
3. | பீன்ஸ் | 100கிராம் |
4. | கொத்தமல்லி | சிறிதளவு |
5. | உப்பு | தேவையான அளவு |
6. | வெங்காயம் | 1பெரியது |
7. | தக்காளி சாஸ் | 3டீஸ்பூன் |
8. | சோயா சாஸ் | 1ஸ்பூன் |
9. | காய்ந்த மிளகாய் | 10 |
10. | பூண்டு | 1முழுசா |
11. | எண்ணெய் | தேவையான அளவு |
12. | பச்சைமிளகாய் | 2 |

அரைக்க வேண்டியது –(மிக்ஸியில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு)
செய்முறை விளக்கம்:
1.முதலில் அகலமான பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி சிறிது உப்பு போட்டு நூடுல்ஸை வேக வைக்க வேண்டும்.
2.வெந்த நூடுல்ஸ்யை வடிகட்டி எடுத்து கொண்டு அதன் மேல் சிறிது எண்ணெய் போட்டு தடவி விடவும். அப்போது தான் நூடுல்ஸ் உதிரியாக இருக்கும்.
3.கேரட்,பீன்ஸ் இரண்டையும் பொடியாக வெட்டிக்;கொள்ளவும்,வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டவும்.
4.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாய்,வெங்காயம் உப்பு போட்டு வதக்கவும்.
5.கேரட் பீன்ஸ் போட்டு சிறிகு தண்ணிர் ஊத்தி தட்டு போட்டு மூட வேண்டும்.
6.பிறகு வதக்கிய காய்களுடன் சோயாசாஸ் ,தக்காளி சாஸ் போடவும்
7.நன்கு கிளறி பின் வெந்த நூடுல்ஸ் போட்டு ,கொரகொரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு போட்டு கிளறி விட வேண்டும்
8.பின்பு நறுக்கிய கொத்தமல்லி போட்டு விடவும்.
9.ஸ்பைஸியான மற்றும் யம்மியான சூடான நூடுல்ஸ் தயார்!
முக்கிய குறிப்பு:
1.நூடுல்ஸ் செய்யும் போது காய்கறிகள் நம் விருப்பத்திற்கு பயன்படுத்தலாம்
2.குடைமிளகாய், கோஸ், பட்டாணி ,புரோக்கோலி
3.தக்காளியை நீரில் வேக வைத்து தோல் உரித்து அந்த பியுரியையும் பயன் படுத்தலாம்
4.காய்ந்த மிளகாயை சூடு நீரில் போட்டு அரைத்த விழுதும் உபயோகிக்கலாம்