how to make chakalaka recipe
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | காரமணி(சிவப்பு) | 1கப் வேகவைத்தது |
2. | கேப்ஸிகம் | குடைமிளகாய் பச்சை 1 |
3. | கேரட் | 1 |
4. | வெங்காயம் | 1 |
5. | தக்காளி விழுது | 3டீஸ்பூன் |
6. | இஞ்சி, பூண்டுவிழுது | 1டீஸ்பூன் |
7. | உப்பு | தேவையான அளவு |
8. | காய்ந்த மிளகாய் | சில்லிபிளேட்ஸ் |
9. | பச்சை மிளகாய் | 2 வேகவைத்த விழுது |
10. | எண்ணெய் | தேவையான அளவு |
11. | மஞ்சள் தூள் | சிறிதளவு |
12. | தனியாத்தூள் | 1ஸ்பூன் |

செய்முறை விளக்கம்:-
1.முதலில் கேப்ஸிகம் மற்றும் வெங்காயம், கேரட் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
2.தக்காளி பெரிய தக்காளியை விழுதாக அரைத்து 3ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்
3.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,குடைமிளகாய் மற்றும் தக்காளி விழுது ,கேரட்டை போட்டு நன்றாக வதக்கவும்
4.பின்பு தனியாத்தூள் மஞ்சள்தூள்,உப்பு பச்சை மிளகாய் விழுது போட்டு நன்றாக வதக்கி காய்ந்த மிளகாய் பிளேட்ஸ் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு மூடி வைக்கவும. ஸடவ் சிம்மில் வைக்கவும்.
5.ஐந்து நிமிடம் கழித்து காய் கலவையை கிளறினால் சக்கலக்கா தயார்!
முக்கிய குறிப்பு:-
1.குடைமிளகாய் சிவப்பு மற்றும் மஞ்சள் பயன்படுத்தலாம்
2.தோசை ,சப்பாத்தி ,ஒயிட் ரைஸ் கேற்ற சைடு டிஷ்