how to make cauliflower gravy – காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
1. | காலிபிளவர் | 1பூ |
2. | தக்காளி | 4 |
3. | வெங்காயம் | 1 |
4. | குழம்பு மிளகாய் தூள் | 2ஸ்பூன் |
5. | உப்பு | தேவையான அளவு |
6. | மஞ்சள் தூள் | சிறிதளவு |
7. | எண்ணெய் | தேவையான அளவு |
8. | புதினா, கொத்தமல்லி | சிறிதளவு |
9. | மிளகு, சீரகம் | 1ஸ்பூன் |
10. | பட்டை | 1 |
11. | கிராம்பு | 1 |
12. | கடுகு சீரகம் | கால் ஸ்பூன் |

செய்முறை விளக்கம்:-
1.முதலில் காலிபிளவரை பச்ச தண்ணிரில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அலச வேண்டும்
2.பின்பு பாத்திரத்தில் தண்ணிரை கொதிக்க வைத்து சிறிது கல்உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து காலிபிளவரை போட்டு சிறிது நேரம் வைக்க வேண்டும்
3.மிக்ஸியில் தக்காளி வெங்காயம் மிளகு சீரகம் பூண்டு பட்டை லவங்கம் கொத்தமல்லி புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும்
4.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் காலிபிளவரை போட்டு 5 நிமிடம் வதக்கவும்
5.பிறகு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
6.பின்பு குழம்பு மிளகாய்தூள் உப்பு சேர்த்து மீதி இருக்கும் மசாலா தண்ணி சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்க வேண்டும்
7. சிறிது நேரம் கழித்து பார்த்தால் கிரேவி பதம் வந்து விடும்
8.சுவையான மசாலா காலிபிளவர் கிரேவி தயார்!
முக்கிய குறிப்பு
1. இந்த கிரேவி குஸ்கா வெஜ்பிரியாணி வெள்ள பிரிஞ்சி வெள்ள சாதம் போன்றவற்றி;க்கு சூப்பர் காமினேஷ்ன்.