how to make basmathi rice briyani (kuska) – பாசுமதி அரிசி குஸ்கா
how to make basmathi rice briyani (kuska) – பாசுமதி அரிசி குஸ்கா
தேவையான பொருட்கள்:-
1. | பாசுமதிஅரிசி | அரை கிலோ |
2. | நாட்டு தக்காளி | 6 |
3. | வெங்காயம் | 4 பெரியது |
4. | கொத்தமல்லி இலை | ஒரு கைபிடி |
5. | புதினா | ஒரு கைபிடி |
6. | கல் உப்பு | தேவையான அளவு |
7. | இஞ்சி பூண்டு விழுது | 2 டீஸ்பூன் |
8. | பட்டை | 4 |
9. | கிராம்பு | 4 |
10. | பிரியாணி இலை | 2 |
11. | பச்சைமிளகாய் | 7 |
12. | மஞ்சள்தூள் | கால் டீஸ்பூன் |
13. | சிவப்பு மிளகாய்தூள் | 1டீஸ்பூன் |
14. | எண்ணெய் | தேவையான அளவு |

how to make basmathi rice briyani (kuska) – பாசுமதி அரிசி குஸ்கா
பாசுமதி அரிசி குஸ்கா செய்முறை விளக்கம்:-
1.பாசுமதி அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
2.வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டிக்கொள்ள வேண்டும், பச்சை மிளகாய் நீளவாக்கில் கட் பண்ணவும்
3.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
4.பிறகு வெங்காயம் பச்சைமிளகாய், தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவிட வேண்டும்.
5.பொன்னிறமாக வதங்கிய உடன் கொத்தமல்லி புதினா இலை மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும் பின்னர் பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி விட்டு ஒரு டம்பளர் அரிசிக்கு 2 டம்பளர் தண்ணீர் சேர்க்க வேண்டும் அதன் படி அரை கிலோ அரிசிக்கு 4 டம்பளர் விட்டு தட்டு போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்
6. பத்து நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான பாசுமதி குஸ்கா தயார்!
குறிப்பு பாசுமதி அரிசி குஸ்கா
1.பிரியாணி செய்யும் போது நாம் எந்த டம்பளர் அரிசி அளக்க பயன்படுத்திறமோ அதே டம்பளர் அளவுக்கு தான் தண்ணி சேர்க்க வேண்டும்
how to make basmathi rice briyani (kuska) – பாசுமதி அரிசி குஸ்கா VIDEO