how to make Andra Style Rasam – ஆந்திர ஸ்டைல் ரசம் செய்வது எப்படி
Spread the love
how to make Andra Style Rasam – ஆந்திர ஸ்டைல் ரசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
1. | தக்காளி | 3 |
2. | புளி | சிறிதளவு |
3. | கல் உப்பு | தேவையான அளவு |
4. | மஞ்சள் தூள் | கால் ஸ்பூன் |
5. | கருவேப்பிலை | சிறிதளவு |
6. | கொத்தமல்லி | சிறிதளவு |
வறுத்து அரைக்க:-
1. | துவரம் பருப்பு | 4 டீஸ்பூன் |
2. | தனியா | 1 டீஸ்பூன் |
3. | கடலை பருப்பு | 5 டீஸ்பூன் |
4. | காய்ந்த மிளகாய் | 5 |
5. | சீரகம் | 1 டீஸ்பூன் |
6. | மிளகு | 1 டீஸ்பூன் |
7. | பூண்டு | 4 பல் |
how to make Andra Style Rasam – ஆந்திர ஸ்டைல் ரசம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்:-
1. மிக்ஸி ஜாரில் துவரம் பருப்பு, கடலைபருப்பு தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கரகரப்பாக பவுடராக அரைக்க வேண்டும்.
2. ஒரு பாத்திரத்தில் தக்காளியை கையால் மசித்து கொள்ளவும் பிறகு புளியையும் சேர்த்து நன்கு கரைக்கவும்
3. தேவையான அளவு தண்ணிர் மஞ்சள்தூள் மற்றும் உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்
4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சிறிது கருவேப்பிலை மசாலா பவுடர் சேர்த்த வதக்கிய பின் புளி தக்காளி கரைசலை ஊற்ற வேண்டும்
5. நன்கு கொதித்த பின் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் மணமான வித்தியசாமான முறையில் செய்த ஆந்திரா ஸ்டைல் ரசம் தயார் !