how to made pudalangai puttu – புடலங்காய் புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:-
1. | புடலங்காய் | 200 கிராம் |
2. | துவரம் பருப்பு | 1 கப் |
3. | பச்சரிசி | 1 கப் |
4. | காய்ந்த மிளகாய் | 4 |
5. | சோம்பு | அரை ஸ்பூன் |
6. | பச்சைமிளகாய் | 1 |
7. | உப்பு | தேவையான அளவு |
8. | கடுகு சீரகம் | கால்,ஸ்பூன் |
9. | மஞ்சள் தூள் | சிறிதளவு |
10. | பூண்டு | 10பல் |
11. | கருவேப்பிலை | சிறிதளவு |
12. | எண்ணெய் | தேவையான அளவு |
13. | வெங்காயம் | 1 பெரிது |

செய்முறை விளக்கம்:-
1. முதலில் துவரம்பருப்பையும், பச்சரிசியையும் தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்யவும் பிறகு நன்கு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்
2. புடலங்காயை மேல் தோலை சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஊறிய அரிசி மற்றும் துவரம் பருப்பை மிக்ஸியில் போட்டு அதில் காய்ந்த மிளகாய்,சிறது உப்பு சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
4. பொடியாக நறுக்கிய புடலங்காயை தண்ணிர் ,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
5. வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பூண்டை தட்டிக்கொள்ளவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெங்காயம் புடலங்காயை போட்டு நன்றாக வதக்கவும்
7. வதக்கியவுடன் கருவேப்பிலை,பூண்டு அரைத்த மாவை போட்டு வதக்கிக்கொண்டே இருக்கவும் அடிபிடிக்காமல் நன்றாக கிளறி விடவும்.
8. பிறகு நன்றாக உதிரி உதிரியாக புட்டு வந்து விடும் மீண்டும் தேவைகேற்ப எண்;ணெய் சேர்த்து கிளறி விட்டு எடுத்தால் சுவையான புடலங்காய் புட்டு தயார்!
முக்கிய குறிப்பு:-
வேக வைத்த புடலங்காய் தண்ணிரில் சிறது உப்பு,மிளகுத்தூள் சேர்த்து குடித்தால் உடம்பிற்கு நல்லது இதில் உள்ள நார்சத்தானது உடல் எடையை குறைக்க வல்லது
புடலங்காயை வேறு எந்த காய்கறிகளிலும் சேர்த்து சமைக்க கூடாது
தனித்தே சமைத்து உண்ணவேண்டும் அப்போதுதான் அதன் மருத்துவ பயன் கிடைக்கும்.