how to made Pesarattu Dosai பெசரட் தோசை செய்வது எப்படி (ஆந்திரா ஸடைல்)
தேவையான பொருட்கள்:-
1. | பச்சைபயிறு | 200கிராம் |
2. | புழுங்கல் அரிசி | 100 கிராம் |
3. | கருவேப்பிலை | சிறிது |
4. | கொத்தமல்லி | சிறிது |
5. | உப்பு | தேவையான அளவு |
6. | இஞ்சி | சிறிய துண்டு |
7. | வெங்காயம் | 1பெரியது |
8. | பெருங்காயம் | 1சிட்டிகை |
9. | எண்ணெய் | தேவையான அளவு |

செய்முறை விளக்கம்:-
1.முதலில் பச்சைபயிறு மற்றும் புழுங்கல்அரிசியை நன்றாக 4 முறை தண்ணிரில் கழுவவேண்டும்
2.பின்பு இரண்டையும் தண்ணிரில் 1 மணிநேரம் ஊர வைக்கவும்.
3.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4.மிக்ஸியில் நன்கு ஊறிய பச்சைபயிறு அரிசி இஞ்சித்துண்டு ,பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை ,கொத்தமல்;லி உப்பு, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தோசை பதத்திற்கு அரைத்து கொள்ளவும் ;
5.அரைத்த மாவை கலக்கி தோசை கல்லில் தோசை வார்த்து சுற்றி எண்;;;ணெய் ஊற்றி அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தை தூவ வேண்டும்.
6.சுவையான ஆரோக்கியமான முறையில் தயாரித்த பெசரட்தோசை ரெடி!
முக்கிய குறிப்பு:-
1. இந்த பெசரட் தோசையுடன் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
2. ;ரவைஉப்புமாவை செய்து தோசையின் நடுவில் சாப்பிடலாம் அதன் சுவை அலாதியாக இருக்கும்
https://youtu.be/0oP_f4UpFCw