how to home made apple jam – ஆப்பிள் ஜாம்
தேவையான பொருட்கள்
1. | ஆப்பிள் பழம் | கால் கிலோ |
2. | சர்க்கரை | 200கிராம் |
3. | ஏலக்காய் தூள் | 2 ஸ்பூன் |
4. | எலுமிச்சைசாறு | 1 ஸ்பூன் |
5. | பீட்ரூட் | பாதி அளவு |

செய்முறை விளக்கம்
1. முதலில் ஆப்பிளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
2. ஆப்பிள் பழம் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
3. பேனில் ஒன்றரை தம்பளர் பச்ச தண்ணியை ஊற்றி பின்பு நறுக்கிய வைத்த ஆப்பிள் பழத்துண்டுகளை போட வேண்டும்.
4. ஆப்பிள் பழம் தண்ணிரில் 15 நிமிடம் நன்றாக வேக வேண்டும் அதற்கு மூடி வைக்க வேண்டும்
5. நடுவில் திறந்து பார்க்கவும் நன்று வேக வில்லையெனில் சிறிது தண்ணிர் சேர்க்கலாம்
6. 15 நிமிடம் கழித்து தட்டை திறந்து பார்த்தால் நல்ல வெந்த நிலையில் இருக்கும் ,கரண்டியால் நன்கு மசித்து விடவும்
7. பிறகு ஏலக்காய் தூளை சேர்க்கவும் கிளறிய படி சர்க்கரை சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்
8. ஆப்பிள் பழம் குழைந்து ஜாம் பதத்திற்கு வரும் .வந்தவுடன் இறக்கி ஒரு பவுலில் போடவும்
9. பாதி பீட்ரூட் மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைக்க வேண்டும் அதே பேனில் அரைத்த பீட்ருட் விழுது 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும்(டார்க கலர் வேண்டுமெனில் 6 ஸ்பூன் சேர்க்கலாம்)
10. புட் கலர் சேர்க்கவில்லை ஆகையால் பிங் கலர் ஜாம் செய்வதற்காக பீட்ருட் சாறு பயன்படுத்தவும்.
11. நன்றாக கிளறினால் ஜாம் பிங் கலரில் வந்து விடும்
12. இந்த ஜாமை மற்றொரு கண்ணாடி பவுலில் போடவும் இப்பொழுது பாதி லெமன் எடுத்து பிழிந்து ஜாம் மேல் கியுஸ் பண்ண வேண்டும் பிறகு கிளறி விட வேண்டும்.
13. டேஸ்ட் யம்மியான இயற்க்கையான முறையில் வீட்டில் செய்த ஆப்பிள் ஜாம் ரெடி!