how to make Fish kulambu – மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:-
1. | வவ்வால் மீன் | 1கிலோ |
2. | வெங்காயம் | 150கிராம் |
3. | நாட்டுதக்காளி | 300கிராம் |
4. | பச்சை மிளகாய் | 3 |
5. | பூண்டு | 5 |
6. | இஞ்சி | சிறியதுண்டு |
7. | சிவப்பு மிளகாய்தூள் | 1டீஸ்பூன் |
8. | மஞ்சள் | கால் ஸ்பூன் |
9. | குழம்பு மிளகாய்தூள் | தேவையான அளவு(காரத்திற்கேற்ப) |
10. | கல் உப்பு | தேவையான அளவு |
11. | புளிகரைசல் | தேவையான அளவு |
12. | கொத்தமல்லி, கருவேப்பிலை | சிறிதளவு |
13. | எண்ணெய் | தேவையான அளவு |
14. | கடுகு மற்றும் வெந்தயம் | 1ஸ்பூன் ,1ஸ்பூன் |
செய்முறை விளக்கம்:-
11. ஒருகிலோ சிவப்பு வவ்வால் மீனை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் 100கிராம் தக்காளியை நறுக்கிகொள்ளவும்
3. கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் , தக்காளி ,வெங்காயம் ,பூண்டு இஞ்சி போட்டு நன்கு வதக்கவும்
4. பின்பு அதை ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
5. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
6. பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், குழம்புமிளகாய்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி தேவையான அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு தட்டு போட்டு மூடிவைக்க வேண்டும்.
7. கொழம்பு சலசலவென கொதிக்கும் போது உப்பு காரம் பார்த்து புளிகரைலை ஊற்ற வேண்டும். பின்பு மீண்டும் கொதி வரும் நிலையில் மீன போட்டு விடவும் அடுப்பை சிம்மில் வைக்கவும்
8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை குழம்பு மேலே தூவி விடவும் .
9. சிவப்பு வவ்வால் குழம்பு ரெடி!
முக்கிய குறிப்பு:-
1.மீன் குழம்பு செய்யும் போது நன்கு கொதித்த பின் தான் மீனை போட வேண்டும்.
2.குழம்பு வைத்த பின் தட்டு போட்டு மூட கூடாது.ஏன் என்றால் சில மீன் வகைகள் போடவுடன் உடனே வெந்து விடும்
3.மீன் குழம்பினை கரண்டியால் கிளறக்கூடாது மீனை ஜல்லிகரண்டியில் தான் எடுக்க வேண்டும் இல்லையெனில் மீன் உடைந்து விடும்.