Coconut Chutney – தேங்காய் சட்னி
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | தேங்காய் | 1கப் |
2. | உடைத்த கடலை | 2டீஸ்பூன் |
3. | பச்சை மிளகாய் | 2மிளகாய் |
4. | உப்பு | தேவையான அளவு |
5. | கொத்தமல்லி | சிறிதளவு |
6. | கருவேப்பிலை | சிறிதளவு |
7. | கடலைபருப்பு | அரை ஸ்பூன் |
8. | உளத்தம் பருப்பு | அரை ஸ்பூன் |
9. | எண்ணெய் | தேவையான அளவு |
10. | கடுகு | கால் ஸ்பூன் |
11. | இஞ்சி | சிறிய துண்டு |
12. | காய்ந்த மிளகாய் | 1 |
செய்முறை விளக்கம்:-
1.;முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி கடலைபருப்பு , உளுத்தபருப்பை வறுக்கவும்
2.மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய், உடைத்த கடலை , உப்பு, போடவும்.
3.பின்பு கொத்தமல்லி , பச்சை மிளகாய், இஞ்சி சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
4.அரைத்த சட்னியை கிண்ணத்தில் போடவும் .
5.எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கருவேப்பிலை கடலைபருப்பு உளுந்த பருப்பு காய்ந்தமிளகாய் போட்டு தாளித்து விடவும்.
6.டேஸ்டான தேங்காய் சட்னி தயார்!
முக்கிய குறிப்பு:-
1.தேங்காய் சட்னி செய்யும் போது உடைத்த கடலை இல்லாமல் (வெறும் உப்பு, தேங்காய்)வைத்தும் அரைக்கலாம்.