Chicken Masala Gravy – சிக்கன் மசாலா கிரேவி

Spread the love

தேவையான பொருட்கள்:-

1.சிக்கன்300கிராம்
2.வெங்காயம்2பெரியது
3.நாட்டுதக்காளிகால்கிலோ
4.பூண்டு   50கிராம்
5.இஞ்சி10கிராம்
6.பட்டை2
7.கிராம்பு2
8.கொத்தமல்லிசிறிதளவு
9.புதினாசிறிதளவு
10.மிளகாய்தூள்   4ஸ்பூன்
11.மிளகு3ஸ்பூன்
12.மஞ்சள்தூள்கால் ஸ்பூன்
13.எண்ணெய்தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

1. முதலில் பொடியாக ஒரு வெங்காயம் 4 தக்காளியை வெட்டிக்கொள்ளவும்.

2. மிக்ஸியில் 3ஸ்பூன் மிளகு, 1 வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, 4 தக்காளி போட்டு பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

3.   கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, தக்காளி, வெங்காயம்  வதக்கி பிறகு சிக்கன் போட்டு வதக்கி மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

4.   பிறகு அரைத்த மசாலாவை ஊற்றி சிறிது தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும்

5.   சிக்கன் மசாலாவுடன் நன்கு வெந்து எண்;ணெய் பிரியும் வரும் போது கிரேவியை  இறக்கவும்

6.   டேஸ்டான சிக்கன் மசாலா ரெடி!

முக்கிய குறிப்பு:-

1. மட்டன் கிரேவி செய்வதற்கும் இதே முறையை பின்பற்றவும்.

2. இந்த சிக்கன் கிரேவி இட்லி, தோசை சப்பாத்தி பூரி ,நாண் மற்றும் சீரகநெய்சாதம், சாதம் சைடுடிஷாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *