மசாலா ஆம்லைட் – Masala Omelette
தேவையான பொருட்கள்:-
1. | முட்டை | 3 |
2. | இஞ்சி | 2துண்டு |
3. | மஞ்சள் தூள் | அரை ஸ்பூன் |
4. | பூண்டு | 10 பல் |
5. | பச்சை மிளகாய் | 5 |
6. | வெங்காயம் | பெரியது 3 |
7. | மிளகுத்தூள் | 2ஸ்பூன் |
8. | உப்பு | தேவையான அளவு |
9. | கொத்தமல்லி | சிறதளவு |
10. | கருவேப்பிலை | சிறிதளவு |
11. | எண்ணெய் | தேவையான அளவு |
அரைக்க :-
(1. இஞ்சி,பூண்டு ,பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.)
செய்முறை விளக்கம்:-
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நல்ல வதக்கவும்.
2. வதக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், அரைத்த இஞ்சி, பூண்டு பச்;சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கி மிளகுத்தூளை போடவும், பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
3. ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து ஊற்றி வதக்கிய மசாலா கலவை சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவேண்டும்.
4. தோசை கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கரண்டியால் முட்டையை தோசையாக ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டால் காரசாரமான மசாலா ஆம்பலட் ரெடி!
முக்கிய குறிப்பு:-
1. முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு தனியாக வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் கருவேப்பிலை, கொத்;தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. அடித்த வைத்துள்ள முட்டையில் போட்டு கலக்கி தோசை கல்லில் ஊற்றினால் இது ஒருவிதமான முட்டை ஆம்பலைட்