பீன்ஸ் பருப்பு உசிலி – beans paruppu usili
தேவையான பொருட்கள்:-
1. | பீன்ஸ் | கால்கிலோ |
2. | கடலை பருப்பு | 50கிராம் |
3. | துவரம் பருப்பு | 50கிராம் |
4. | காய்ந்த மிளகாய் | 8-10 |
5. | சோம்பு | 1ஸ்பூன் |
6. | கடுகு | 1ஸ்பூன் |
7. | எண்ணெய் | தேவையான அளவு |
8. | கருவேப்பிலை | சிறிதளவு |
9. | உப்பு | தேவையான அளவு |
10. | மஞ்சள்தூள் | அரை ஸ்பூன் |
11. | பூண்டு | 6பல் |
செய்முறை விளக்கம்:-
1. முதலில் கடலை பருப்பையும்,துவரம் பருப்பையும் நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பீன்ஸை பொடியாக நறுக்கியக்கொள்ளவும், நன்றாக ஊறிய பருப்பை மிக்ஸியில் போட்டு, அதனுடன் சோம்பு, காய்ந்தமிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக வெட்டிய பீன்ஸ் துண்டுகளை போடவும்
4. மஞ்சள் சேர்த்து மாவை பிசைந்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை போட்டு இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
5. 10 நிமிடம் கழித்து வெந்த இட்லியை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும் பின்பு உதிரிகளாக்கவும்
6. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகுசீரகம் கருவேப்பிi;ல போட்டு தாளித்து வெந்த மாவை போட்டு சிறிது உப்பு சேர்த்து கிளறி எடுத்தால் பருப்பு பீன்ஸ் உசிலி தயார்!
முக்கிய குறிப்பு:-
1.முள்ளங்கி, பால் புடலங்காய் வைத்தும் பருப்பு உசிலி செய்யலாம். நீங்களும் செய்யுங்க சமையலை ஜாமாயுங்க!