பீட்ரூட் புட்டு – beetroot puttu

Spread the love

தேவையான பொருட்கள்:-

1.பீட்ரூட்கால்கிலோ
2.வெங்காயம்2 பெரியஅளவு
3.தக்காளி1
4.பட்டை1
5.கிராம்பு1
6.உப்புதேவையான அளவு
7.பொட்டுகடலை50கிராம்
8.பூண்டு10 பல்
9.பச்சைமிளகாய்3
10.கருவேப்பிலைகொஞ்சம்
11.எண்ணெய்தேவையானஅளவு
12.கடுகு,சீரகம்கால், ஸ்பூன்

அரைக்க :- மிக்ஸியில் பொட்டுகடலையை சிறிது தண்ணி சேர்த்து மீடியமாக அரைக்கவும் (நைசாக வேண்டாம்)


செய்முறை விளக்கம்:-
1.முதலில் பீட்ரூட்டை தோலை நீக்கியவுடன் நன்றாக துருவிக் கொள்ளவும்.

2.கடாயில் எண்ணெய் ஊற்றவும் பிறகு கடுகுசீரகம் தாளித்து , பொடியாக வெட்டிய தக்காளி , வெங்காயம் ,நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்

3.பின்பு துருவிய பீட்ரூட்டை போட்டு நன்றாக வதக்கி உப்பு , மஞ்சள்தூள், பட்டை கிராம்பு சேர்த்து கிளறி தட்டு போட்டு மூடவும் .

4.பத்து நிமிடம் கழித்து பீட்ரூட்டை கிளறி அரைத்த பொட்டுகடலை போடவும், பின்பு பூண்டை தட்டி போட்டு நன்றாக கிளறவும் .

5.ஐந்து நிமிடம் தட்டு போட்டு மூடி , பீட்ரூட்டை வதக்கினால் புட்டு பதத்திற்கு வரும்

6.ஆரோக்கிய மான முறையில் தயாரான பீட்ரூட் புட்டு !

முக்கிய குறிப்பு:- நீங்க இந்த பீட்ரூட் புட்டு செய்து தோசை ,சப்பாத்தி , பிரட்டில் வைத்து ரோலாக மடித்து குழந்தைகளுக்கு கொடுங்க அவங்க விரும்பி சாப்பிடுவாங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *