செட்டிநாடு காடை தம் பிரியாணி – kadai biryani
தேவையான பொருட்கள்:-
1. | காடை | 5 |
2. | பிரியாணிஅரிசி | முக்கால் கிலோ |
3. | வெங்காயம் | அரை கிலோ |
4. | நாட்டு தக்காளி | முக்கால் கிலோ |
5. | பச்சைமிளகாய் | 5 |
6. | இஞ்சி | 50 கிராம் |
7. | பூண்டு | 100 கிராம் |
8. | பட்டை | 4 |
9. | லவங்கம் | 4 |
10. | சிவப்பு மிளகாய்தூள் | 3ஸ்பூன் |
11. | மஞ்சள்தூள் | அரை ஸ்பூன் |
12 | புதினா | 1 கப் |
13. | கொத்தமல்லி | 1 கப் |
14. | எண்ணெய் | தேவையான அளவு |
15. | கல் உப்பு | தேவையான அளவு |
செய்முறை விளக்கம்:-
1. முதலில் வெங்காயம் பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும் .
2. நாட்டு தக்காளியை பொடியாக நறுக்கவும் பின்பு கொத்தமல்லி, புதினா, பொடியாக கட் பண்ணவும்.
3. இஞ்சி,பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
4. வாய்அகன்ற பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் எண்;ணெயை ஊற்றி சூடாக்கவும்
5. பின்பு பட்டை, லவங்கம்,வெங்காயம் ,பச்சைமிளகாய் கல் உப்பு சேர்த்து வதக்கவும்
6. பின்பு புதினா , கொத்தமல்லி தக்காளிபோட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
7. காடையை போட்டு வதக்கி காஷ்மிரிமிளகாய்தூள் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
8. பிரியாணி அரிசி சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது.
9. நீங்கள் அரிசி அளக்கும் தம்பளரில் 6 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும், பிறகு மசாலாத்தண்ணியை கலக்கி விட்டு தட்டு போட்டு மூடவும்
10. நன்கு உலை கொதித்தவுடன் பிரியாணி அரிசியை போட்டு கிளறி விடவும்
11. இரண்டு கொதி வந்த உடன் பிறகு தட்டு போட்டு மூடி அதன் மேல் தோசைகல்லை வைத்து தம் போடவும்.முக்கியமாக அடுப்பை சிம்மில் வைத்து சமைக்கவும்.
12. 15 நிமிடம் கழித்து பின் தம் எடுத்து பார்த்தால் பிரியாணி தயாரான பதத்தில் இருக்கும்
13. நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்
14. சுவையான செட்டிநாட்டு காடை பிரியாணி தயார்!
முக்கிய குறிப்பு
1. நாட்டுதக்காளியை பயன்படுத்தினால் சுவைக்கூடுதலாக இருக்கும்
2. சீரகசம்பா அரிசியிலும் செய்யலாம்.
3. பிரியாணி செய்யும் போது ஸ்டவ் சிம்மில வைத்து சமைத்தால் நல்லது.