குழி பணியாரம் – Kuli Panayaram
தேவையான பொருட்கள்:-
1. | இட்லி மாவு | 1 கிண்ணம் |
2. | கடலை பருப்பு | 3 ஸ்பூன் |
3. | பச்சை மிளகாய் | 4 |
4. | பெரிய வெங்காயம் | 4 |
5. | கறிவேப்பிலை | சிறிதளவு |
6. | கொத்தமல்லித்தழை | சிறதளவு |
7. | உப்பு | தேவையான அளவு |
8. | கடலை எண்;;;;ணெய் | தேவையான அளவு |
9. | கடுகு உளுந்து | 1 ஸ்பூன் |
செய்முறை விளக்கம்:-
1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
2. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
3. பொடியாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
4. கடாயில் எண்;ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து, பச்சை மிளகாய், கடலை பருப்பு போட்டு நன்று பொன்னிறமாக வறுக்கவும்.
5. பின்பு நறுக்கிய n;வங்காயம் சேர்த்து வதக்கவும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வதக்கி இட்லி மாவில் கொட்டவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் .
6. அடுப்பை பற்ற வைத்து குழி பணியாரச்சட்டியை வைத்து நன்றாக சூடாக்கவும்
7. சூடேறிய சட்டியில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மாவையை ஊற்றவும்
8. சிறிது நேரம் வேக விட்டு சின்ன ஸ்பூன் (அ) கத்தியால் ;திருப்பி போடவும்.
9. இரு புறமும் பொன்னிறமாக மாறி வெந்தவுடன் எடுக்கவும்;
10. சுவையான குழி பணியாரம் ரெடி!
11. இதற்கு தொட்டு கொள்ள வேர்கடலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
முக்கிய குறிப்பு:- நீங்க பச்சை காய்கறிகள் போட்டும் செய்யலாம், கீரை வகைகள் போட்டும் செய்யலாம்.