காரைக்குடி வெந்தய புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்
1. | சாம்பார் வெங்காயம் | 10 |
2. | பூண்டு | 8 |
3. | புளி | நெல்லிகாய் அளவு |
4. | கருவேப்பிலை | கைப்பிடி |
5. | கல்உப்பு | தேவையான அளவு |
6. | கடலை பருப்பு | 2 ஸ்பூன் |
7. | தனியா | 3 ஸ்பூன் |
8. | தேங்காய் | 5 ஸ்பூன் |
9. | மிளகு | 1 ஸ்பூன் |
10. | சீரகம் | 1 ஸ்பூன் |
11. | வெந்தயம் | அரை ஸ்பூன் |
12. | காய்ந்த மிளகாய் | 8 |
13. | மஞ்சள் தூள் | சிறிதளவு |
14. | நல்லெண்ணெய் | 50கிராம் |
15. | எண்ணெய் | 5ஸ்பூன் |
16. | வெல்லம் | சிறிதளவு |

செய்முறை விளக்கம்:- காரைக்குடி வெந்தய புளிக்குழம்பு
1. முதலில் கடாயை காய வைத்து அதில் கடலைபருப்பு தனியா மிளகு சீரகம் வெந்தயம் போட்டு டரை ரோஸ்ட் பண்ண வேண்டும்
2. பிறகு மசாலா வகைகள் நன்றாக வறுப்பட்டவுடன் பொடியாக நறுக்கிய தேங்காய் ,தட்டி வைத்த பூண்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்க வேண்டும்
3. வறுத்த கலவையை ஆற வைக்கவும் பின்பு அதை சிறிது தண்ணிர் சேர்த்து மிக்ஸியில் பேஸ்டாக அரைக்கவும்
4. கடாயில் எண்;ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை ஒரு காய்ந்த மிளகாவை கில்லி போட்டு சேர்த்து தாளிக்க வேண்டும் ,பிறகு சிறிய வெங்காயத்தை சேர்க்கவும் வதக்கி விட்டு புளியை கரைத்த தண்ணியை சேர்த்து உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விட வேண்டும்
5. பிறகு அரைத்த மசாலா விழுதை போட்டு கலக்கி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்
6. கொதி வந்தவுடன் வெல்லத்தை சேர்த்து சிறிது நேரத்தில் நல்ணெண்ணெய் மற்றும் பெருங்காயத்தூளை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்க வேண்டும். கைஅளவு கருவேப்பிலையை தூவி விட்டு பரிமாறவும்.
7. செட்டிநாடு வெந்தய புளிக்குழம்பு ரெடி ,சுவையோ அலாதி வெரி சூப்பர் அரோமா அண்ட் டெலிசியஸ் ரெசிபி தயார்!
டிப்ஸ்
1. இந்த வெந்தயபுளிக்குழம்பு இட்லி தோசை மற்றும் சாதம் பிராமதமான சைடு டிஷ்.
2.உங்களுக்கு இனிப்பு அதிகமா வேண்டுமென்றால் வெல்லத்தை கூடுதலாக சேர்த்து சமைக்கலாம்.