காடை தொக்கு – kaadai gravy
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | காடை | 2 |
2. | வெங்காயம் | 1பெரியஅளவு |
3. | தக்காளி | 4 |
4. | இஞ்சி | 1துண்டு |
5. | பூண்டு | 1முழுசா |
6. | பட்டை | 2 |
7. | கிராம்பு | 2 |
8. | குழம்பு மிளகாய்தூள் | 3ஸ்பூன் |
9. | மஞ்சள்தூள் | சிறிது |
10. | கல்உப்பு | தேவையான அளவு |
11. | எண்ணெய் | தேவையான அளவு |
12. | மிளகு | 2ஸ்பூன் |
13. | கொத்தமல்லி புதினா | சிறிதளவு |
செய்முறை விளக்கம்:-
1. முதலில் மிக்ஸியில் 2 நாட்டு தக்காளி பாதி வெங்காயம் , மிளகு ,இஞ்சி ,பூண்டு, கொத்தமல்லி, புதினா, சிறிது தண்ணி சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
2. கடாயில் எண்;;ணெய் ஊற்றி பட்டை கிராம்பு நறுக்கிய பாதிவெங்காயத்தை பொடியாக நறுக்கி 2 தக்கர்ளி போட்டு வதக்கவும்
3. பின்பு காடையை போட்டு அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கவும் பிறகு தண்ணிர் ஊத்தி வேக விடவும்
4. வெந்த மசாலா எல்லாம் ஒன்றாக சேர்ந்து கிரேவி பதத்தில் வரும்
5. கார சாரமான காடை மசாலா ரெடி!
முக்கிய குறிப்பு
1. இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு இந்த டிஷ் ;சூப்பராக இருக்கும்.
2. கொஞ்சம் தண்ணியாக வைத்தால் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்